அரசியல்வாதிகள், தொழிலதிபர்களால் சித்ராவிற்கு மிரட்டலா? சிக்கும் சித்ராவின் முன்னாள் காதலர்கள்!
பாண்டியன் ஸ்டோர் நாடகத்தின் மூலம் பிரபலமானவர் தான் முல்லை என்கின்ற சித்ரா. இவர் சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார். அது தற்கொலை இல்லை என பலர் இப்போது கருத்துகளை முன்வைத்து வருகிறார்கள்.
சித்ராவின் மரணம் குறித்த விசாரணையில் அவருடைய கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தற்போது புது திருப்பமாக சித்ராவின் தற்கொலை தொடர்பாக ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்து, அதில் திடுக்கிடும் பல தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அவர் சமூக வலைதளங்களில் இருந்து பல ஆதாரங்களை திரட்டி உள்ளாராம். மேலும் நடிகை சித்ரா ஏற்கனவே மூன்று ஆண்களை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நின்று உள்ளதாகவும், அதுமட்டுமில்லாமல் சித்ராவிற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாகவும், விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் ரக்சன் டேட்டிங்கில் எடுத்த நெருக்கமான புகைப்படத்தை வைத்து மிரட்டியதாகவும் சமூக ஊடகங்களில் பல தகவல்களை வெளியாவதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் கடந்த ஆண்டு திருவான்மியூரில் ஒன்றரை கோடி மதிப்பிலான வீடும், ஒரு கோடி மதிப்பிலான ஆடி கார் வாங்கியதாகவும், அதற்கு முதலீட்டிற்கு சித்ராவிற்கு தெரிந்த நபர்கள் உதவியதாகவும் மீதித் தொகையை மாத தவணையில் அடைந்த வந்துள்ளாராம்.
ஆகையால் சின்னத்திரையில் ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் சித்ராவிற்கு திருமணமானால், பிரபலம் குறையத் தொடங்கி விடும் என்ற நோக்கத்தில் அவருக்கு முதலீடு செய்த தொழிலதிபர்களும், பழக்கம் உள்ள பெரிய நபர்களும், சினிமா நபர்களும், அரசியல்வாதிகளும் சித்ராவிற்கு மிரட்டல் விடுத்து இருக்கலாம்.
மேலும் சித்ரா தங்கியிருந்த பிளசன்ட் ஒன் டே ஹோட்டலில் சிசிடிவி கேமரா அழிக்கப்பட்டதற்கான காரணத்தையும், சித்ரா திருமணம் செய்து கொண்டால் பின் விளைவு ஏற்படும் என மிரட்டிய நபர்களையும் சித்ராவின் தொலைபேசியை வைத்து காவல்துறை குற்றவாளிகளை கண்டுபிடித்து தனது மகனை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் ரவிச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனவே ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் அளித்த இந்த மனுவிற்கு பிறகு, பல அரசியல் பிரமுகர்களும், தொழிலதிபர்களும், சித்ராவின் முன்னால் காதலர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.