சிறுவர் மருத்துவமனையில் 70 சிறார்களுக்குத் தொற்று
கொழும்பு பொரளை சிறுவர் மருத்துவமனையில் இதுவரை 70 சிறுவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் ஜி.விஜேசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த மருத்துவமனையில் நாள்தோறும் 5 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகி வருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.