பொலிஸார், சிவில் உடைகளில் கடமையில் ஈடுபட்டுள்ளதாக அஜித்ரோஹன தெரிவிப்பு.
பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் புகையிரதங் களில் பொலிஸார், சிவில் உடைகளில் கடமையில் ஈடு பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பயணிகள் போக்குவரத்து பஸ்களில் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக 400 பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொ லிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பயணிகள் போக்குவரத்து பஸ்களில் தனிமைப்படுத்தல் சட்டம் கடைப்பிடிக்கப்படுகின்றதா? என்பது தொடர்பிலும் சாரதிகளின் நடத்தை தொடர்பிலும் ஆராய இந்த அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரி வித்தார்.
அத்துடன், வீதி விபத்துக்களைக் குறைக்கவும், கொவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் வழங்கப் பட்டுள்ள அறிவுறுத்தல்களை பொது மக்கள் உரிய முறை யில் பின்பற்றுகின்றார்களா என்பதைக் கண்டறி வதற் காக சிவில் உடைகளில் பொலிஸார் கடமையில் ஈடு படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.