ஸ்ரான்லி வீதி,பஸ்தரிப்பு நிலையத்தில் வெள்ளம் தேங்கியதற்கு உண்மைக் காரணம்.

யாழ்பாணம் ஸ்ரான்லி வீதி மற்றும் பஸ்தரிப்பு நிலையத்தில் வெள்ளம் தேங்கியதற்கு பல பேர் பல காரணங்கள் சொன்னாலும் உண்மைக் காரணம் இதுதான். வெள்ளம் வளிந்தோடும் பிரதான வாய்க்காலுக்கு மேல் அல்பிரட் துரையப்பா மேயராகா இருந்தபோது யாழ் மாநகர சபை புதிய நவீன சந்தைக் கட்டடத் தொகுதி கட்டியதும் வாய்க்காலை மேவி தனியாரை கடைக் கட்டடம் கட்ட யாழ் மாநகர சபை அனுமதியளித்ததும். கரன் தியட்டர் அருகாமையில் இருந்த வட்டக்குளத்தை ரில்கோ கோட்டல் ஆக்கிரமிக்க விட்டதும். நீண்டகால காரணமாகும்.

யாழ் நகர் மேற்கு மற்றும் வடக்கு வண்ணார்பண்ணை நல்லூர் பகுதிகளில் பெய்யும் மழை வெள்ளம் வெளியேறும் பிரதான வாய்க்காலான வண்ணாங்குழம் புல்லுக்குளம் ஆகியவற்றை மிக நீண்டகாலம் துர்வாரப் படாது பொலித்தீன் பிளாஸ்ரிக் களிவுகளால் அடைபட்டுக் கிடப்பதே ஆகும்.

இந்த வாய்க்கால் சுமார் 3000 அடி ஆக்கிரமிக்கப்பட்டு சிமேந்து பிளேற்றால் மூடப்பட்டுள்ளது நீங்கள் படத்தில் பார்க்கும் களிவுகள் சுமார் 5 அடி துரத்திற்கு துப்பரவு செய்து அகற்றப்பட்ட களிவுகள் ஆகும். இந்த வாய்க்காலின் அரைவாசி உயரத்திற்கு மண் உள்ளது இத்த வாய்க்காலை முழுமையாக துப்பரவு செய்ய வேண்டும் என்றால் வண்ணாங் குழத்தில் வாய்க்கால் தொடங்கும் இடத்தில் மண்மூடைகள் அடுக்கி நீர் வரத்தை தடைசெய்து வாய்க்காலில் உள்ள களிவு நீரை வெளியேற்றி வாய்க்காலில் உள்ள மண் மற்றும் களிவுகளை அகற்றி முனீஸ்வரன் வீதியில் உள்ள மதகை அகலமாக்கினால் மட்டுமே வெள்ளப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் இந்த வாய்க்காலை தொடர்சியாக துப்பரவு செய்தாலும் முற்று முழுதாக துப்பரவு செய்ய சுமார் 6 மாதங்கள் தேவை சரியான நேரத்தில் சரியான திட்டமிடல் இன்மையே இந்த வொள்ளத்திற்கு காரணம்.
