20 நாடுகள் பிரிட்டனுக்கான விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன
பிரிட்டனில் புதியவகை கரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதால் அங்கு விமானப் பயணத்து ரஷ்யா தடை விதித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய அரசு தரப்பில், “ தற்போதுள்ள நிலவரத்தை கருத்தில் கொண்டு கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் தடை அமலுக்கு வருகிறது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஐரோப்பாவில் தற்போது பரவி வரும் புதியவகை கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஸ்புட்னிக் மருந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் செல்வதற்கான விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.
புதிய வகை வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.