இரணைமடுக்குள வான் கதவுகள் திறப்பு.

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் மாவட்ட அரசாங்க அதிபரால் திறந்து வைத்துள்ளார்.
இன்று மாலை 5 மணிக்கு இரணைமடுக் குளத்தின் இரண்டு வான் கதவுகள் 6″ திறந்து நீர் வெளியேற்றப்படுகின்றது.

காலநிலை அவதானநிலைய 100 மி.மீ மழைவீழ்ச்சி எதிர்வு கூறலுக்கு அமைவாகவும் 2018 ம் வருட எதிர்வு கூறலை விஞ்சிய மழைவீழ்ச்சி ஏற்பட்ட அனுபவம் காரணமாகவும் முன்ஆயத்த செயற்பாடாக இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர்பாசன திணைக்கள உயர் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் விழிப்பு நிலையில் உள்ளார்கள்.

மழைவீழ்ச்சி யும் நீர் வரத்தும் அதிகரிக்குமாயின் நீர் வெளியேற்றல் செயற்பாடும் அதிகரிக்கும்.

மக்கள் அவதானமாக இருக்குமாறு தயவுடன் வேண்டப்படுகின்றார்கள்.
