புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாவட்ட செயலகத்தில் கடமையாற்றிவரும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளிற்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று(23) மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வில் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கௌரவிப்பு நிகழ்விற்கான திட்டமிடலுடன் கூடிய பண உதவியினை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் M.யேசுறெஜினோல்ட் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மறைக்கோட்ட முதல்வரும், முல்லைத்தீவு பங்குத் தந்தை அருளானந்தம்யாவிஸ் அடிகளார் அவர்களால் குறித்த மாணவர்களுக்கு இறை ஆசிகளுடன் கூடிய நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.