தவிசாளருக்குக் கொரோனாத் தொற்று: ஊடகவியலாளர்கள் தனிமைப்படுத்தல்.

தவிசாளருக்குக் கொரோனாத் தொற்று: ஊடகவியலாளர்கள் தனிமைப்படுத்தல்.
கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் பங்கேற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன.
இரு பிராந்திய ஊடகவியலாளர்கள் நேற்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிகழ்வுகளுக்குச் சென்ற ஏனையவர்களின் விபரமும் திரட்டப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.