யாழில் மேலும் ஒருவருக்குக் கொரோனா! மருதனார்மடம் கொத்தணி 95 ஆக உயர்வு

யாழில் மேலும் ஒருவருக்குக் கொரோனா! – மருதனார்மடம் கொத்தணி 95 ஆக உயர்வு.
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 120 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது எனவும், இதன்போது இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்துள்ளது.