திருக்கோவில் பிரதேச கடல் கரைப்பரப்பில் இறந்த நிலை நிலையில் நன்னீர் மீன்கள் கரையொதுங்கியுள்ளது..
திருக்கோவில் பிரதேச கடல் கரைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. தற்போது கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடைமழைகாரணமாக ,ஆலையடிவேம்பு ,அக்கரைப்பற்று ,திருக்கோவில் ஆகிய பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள சின்ன முகத்துவாரம் மற்றும் பெரிய முகத்துவாரம் ஆகியன வெட்டி விடப்பட்டது இதனால் நன்னீர் கடல்நீருடன் கலந்ததால் நன்னீர் மீன்கள் கடல் நீருக்குள் சென்றதன் விளைவாக மீன்கள் இறந்து இருக்கலாம் சந்தேகக்கப்படுகின்றது
இறந்த மீன்களை அகற்றும் பணிகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கெளரவ இ.வி.கமலராஜன் அவர்களின் பங்கு பற்றலுடன் திருக்கோவில் முருகன் ஆலய நிருவாகாத்தினரும் இணைந்து இடம்பெற்றது.
– Sathasivam Nirojan