மதுரையில் சீமானை தாக்கி விஜய் ரசிகர்கள் அடித்த போஸ்டரால் பரபரப்பு
சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி தற்போது அனைத்து கட்சிகளும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சினிமாவை தாண்டி அரசியல் கால்பதிக்கும் கமலஹாசன் மற்றும் ரஜினி காந்தை பற்றி பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்யை தாக்கி பேசியுள்ள சம்பவம் அனைத்து ரசிகர்களையும் கொதிப்படைய செய்துள்ளது. நேற்றைய தினத்தில் சமூக வலைத்தளங்களில் சீமானைப் பற்றி அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர்.
அதாவது இந்தத் தேர்தலில் ரஜினி மற்றும் கமலஹாசனுக்கு விழும் தோல்வியைப் பார்த்து தளபதி விஜய் போன்ற நடிகர்கள் அரசியலில் கால் பதிக்க கூடாது என்பது சீமானின் கருத்து. செந்தமிழ் சீமான் அரசியலுக்கு முன்னதாக சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றியதை மறந்து விட்டாரா.?
இது போன்ற பல கேள்விகளை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சினிமாவை தாண்டி அரசியலுக்கு வரும் நடிகர்கள் மக்களுக்கு விடிவு காலம் பிறந்து விடாதா என்ற எண்ணத்தில் மண்ணை போடும் விதமாக பேசி இருப்பது தவறு என அரசியல் பிரமுகர்கள் விவாதித்து வருகின்றனர்.
வெறித்தனமான ரசிகர்கள் கொண்ட மதுரை மாவட்டத்தில் சீமானை திட்டிய அடிக்கப்பட்டு போஸ்டர் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். கண்டிப்பாக இந்த தவறான கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் கோரிக்கை.
ஆனால் எந்த ஒரு நேரத்திலும் சீமான் இதுக்கு செவி சாய்க்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. சீமானின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை முழுவதும் பல போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
மேலும் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் போன்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளன.