ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் முழுவதுமாக வெளியேறியதாக தகவல்.
பிரிட்டன், ஐரோப்பிய கூட்டமைப்பு இடையேயான பிரெக்ஸிட்டுக்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் முழுவதுமாக வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவது தொடர்பான மசோதா அந்நாட்டு பார்லிமென்ட்டில் 2016-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. 2020 ஜன.31-ம் தேதி பிரிட்டன் அதிகாரபூர்வமாக வெளியேறிது. எனினும் ஐரோப்பிய கூட்டமைப்பு விதிகளை பிரிட்டன் பின்பற்ற 11 மாதம் கெடு விதிக்கப்பட்டது. புதிய விதிகளை நிர்ணயிப்பதற்கான கெடு நிறைவடைய (டிச.31) ஒரு வாரங்கள் உள்ள நிலையில் அதற்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது டுவிட்டரில் ‘ஒப்பந்தம் முடிந்தது ‘என பதிவேற்றியுள்ளார்.