சிஸ்டர் அபயா கொலை : குற்றாவாளிகளை பாதுகாத்த திருச்சபை!
28 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவையே உலுக்கியது அந்த நிகழ்வு. 19 வயதே நிரம்பிய கத்தோலிக்க பெண் துறவி அபயா 1992-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி மாலை அவர் தங்கியிருந்த புனித பியூஸ் கான்வென்ட் வளாக கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டார். கேரளாத்தை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவையுமே உலுக்கிய அந்த நிகழ்வில் இது கொலையா? தற்கொலையா என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் கேரள அரசுக்கு இருந்தது. அன்று கேரளத்தை ஆட்டி செய்த காங்கிரஸ் அரசுக்கு இது நெருக்கடியாக மாறிய போதும் கத்தோலிக்க திருச்சபைகளின் அழுத்தங்களை மீறி கேரள போலீசால் இவ்வழக்கை நேர்மையாக நடத்த முடியவில்லை.
ஓராண்டு முடிவில் இந்த வழக்கை கைவிடும் நிலைக்கு வந்த கேரள போலீஸ் அபயா கிணற்றுக்குள் கிடந்தது போல இந்த வழக்கையும் கிணற்றுக்குள் போட்டது. ஆனால், தாமஸ் கோட்டூர், சிஸ்டர் செஃபி இருவர் மீதும் சந்தேகம் இருந்தாலும் அந்த வழக்கு அதற்கு மேல் முன்னேறவில்லை.
1993-ஆல் ஆண்டு 25 வயதே நிரம்பிய கத்தோலிக்கரான ஜெமோன் புத்தன்புரைக்கல் ஏன்ற மனித உரிமை ஆர்வலர். அபயா கொலை செய்யப்பட்டுள்ளார். சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடினார். அபயாவின் பெற்றோரும் அவருடன் இணைய மீண்டும் இந்த வழக்கு சூடு பிடிக்க கேரள அரசு சிபிஐ வசம் வழக்கை ஒப்படைத்தது.
சிபிஐ விசாரணை அதிகாரியாக பி.தாமஸ் என்ற கத்தோலிக்கர் நியமிக்கப்பட்டார். ஆரம்பத்திலேயே இது கொலை என்பதை உணர்ந்த தாமஸ் “அபயா கொல்லப்பட்டிருக்கிறார். ஆனால், சில இடங்களில் நிலவும் மவுனங்களால் இதை நிரூபிக்க போதுமான ஆதரங்கள் கிடைக்கவில்லை” என்றதோடு எப்படியாவது குற்றவாளிகள் எனத் தெரிந்த தாமஸ் கோட்டூர் மற்றும் சிஸ்டர் செஃபியை கைது செய்ய முயன்றார். ஆனால், எங்கிருந்தோ வந்த அழுத்தம் அவரை பணி செய்ய விடாமல் தடுக்க நேர்மையான விசாரணை அதிகாரியான பி.தாமஸ் பதவியை விட்டே சென்றார்.
பின்னரும் அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வந்தது. அபயா பிணமாக மீட்கப்பட்டுவதற்கு முந்தைய நாள் அபயாவை கடைசியாகக் கண்ட அறைத் தோழியும் துறவியுமான ஷெல்லி முதலில் சாட்சி சொன்னார். பின்னர் பிறழ் சாட்சியாக மாறினார். ஆனால், அந்த கான் வெண்டில் அருகில் வசித்த ஒருவர் பிணமாக மீட்கப்பட்ட அன்று அதிகாலை பெண் துறவியர் இல்லத்திற்குள் அருட்தந்தை தாமஸ் கோட்டூரைப் பார்த்ததாக சாட்சியம் அளித்தார்.
இன்னொரு பக்கம் இந்த வழக்கை சிதைக்க தாமஸ் கோட்டூர் வேணுகோபால் நாயர் என்ற வழக்கறிஞருக்கு லஞ்சல் கொடுக்க அவரும் விசாரணை ஆணையத்தில் உண்மையைச் சொல்ல தாமஸ்கோட்டூரும், சிஸ்டர் செஃபியும் கைது செய்யப்பட்டார்கள். 2008-ஆம் ஆண்டில்தான் இருவரும் கைது செய்யப்பட்டார்கள்.
நடந்தது இதுதான்!
கேரள மாநிலம் கோட்டயத்தில் இருக்கும் சிரியன் கத்தோலிக்கர்களுக்குச் சொந்தமான புனித பியூஸ் கான்வெண்டின் சமையலறையில் வைத்து அருட்தந்தை தாமஸ் கோட்டூரும் ம் சிஸ்டர் செஃபியும் பாலியல் உறவு கொள்கிறார்கள். அதை அதிகாலை தண்ணீர் அருந்தச் சென்ற அபயா பார்த்து விடுகிறார். பெரும் அர்ப்பணிப்போடும், சேவை மனப்பான்மையோடும் துறவு வாழ்வுக்குச் சென்ற இளம் பெண்ணான அபயாவுக்கு இது அதிர்ச்சியாக இருக்க அந்த அறையிலேயே சுத்தியாலால் தாக்கப்பட்டு அபயா கொல்லப்படுகிறார். அவரது உடலை கிணற்றுக்குள் தள்ளுகிறார்கள். இதுதான் நடந்தது.
அருட்தந்தையு பெண் துறவியல் இல்லத்தில் இருந்ததை பார்த்த சாட்சியங்கள் இருக்க அவர்கள் உறவு கொண்டார்கள் என்பதற்கு சாட்சியம் இல்லையா? ஆமாம் இருந்தது. அந்த சம்பவம் நடந்த அதே அதிகாலை அடக்கா ரவி என்ற திருடன் அந்த துறவியர் இல்லத்தின் மேலே இருந்த செம்பு இடிதாங்கியை திருடச் செல்கிறான். அவன் தாமஸ் கோட்டூரும், செஃபியும் உறவு கொண்டதை பார்க்கிறான். அவந்தான் கடைசி வரை பிறழ் சாட்சியாக மாறாமல் சிஸ்டர் அபயாவின் மரணத்திற்கு நீதி வழங்குகிறான்
இந்த அடங்கா ராஜு என்ற திருடனை கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க முயல்கிறார்கள். அவன் சொல்கிறான் “என் தேவைகள் மிகச்சிறியவை அதற்கு திருட்டுத் தொழிலே போதும். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் அவர்களை கரையேற்றி விட்டால் போதும். ஆனால் அதற்கான என் மகள் வயதுடைய அபயாவின் கொலைக்காக பணம் பெற மாட்டேன்” என அனைத்து சித்திரவதைகளையும் தாங்குகிக் கொள்கிறான்.
கேரள போலீசார் பல நாட்கள் அடங்கா ராஜுவை போலீஸ் காவலில் வைத்து சித்திரவதை செய்தும், பண ஆசை காட்டியும் விலை போகாமல் உன்னதமான மனிதனாக அடங்கா ராஜு கடைசி வரை இருந்ததுதான் இந்த வழக்கின் சிறப்பு.
ஆனால், 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது அபயா வழக்கில் தாமஸ் கோட்டூருக்கும் சிஸ்டர் செஃபிக்கும் ஆயுள் தண்டனை வழங்கி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த 28 ஆண்டுகளில் கத்தோலிக்க திருச்சபை அபயாவைக் கொன்ற கொலையாளிகளை பாதுகாக்க இந்தியாவின் உயர்ந்த வழக்கறிஞர்களை வைத்து நீதிமன்றங்களில் வாதாடியது.
குற்றம் புரிந்தவர்கள் இவர்கள்தான் என்பது தெரிந்தும் அவர்களை சபையை விட்டு நீக்காமல் பாதுகாத்தது. இதோ நீதி கிடைத்திருக்கிறது. இந்த தீர்ப்புக்குப் பின்னர் இரண்டு வாக்குமூலங்கள் நம்மை கசிய வைக்கிறது. இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த சிபிஐ விசாரணை அதிகாரி பி.தாமஸ் சொல்கிறார். “என்னோடு பணி செய்தவர்கள் டி.ஐ.ஜி போன்று பெரும் பதவிகளுக்குப் போய் விட்டார்கள். நான் என் பணியில் இருந்து விலகிக் கொண்டேன். நான் இறப்பதற்குள் அபயாவுக்கு நீதி கிடைக்காதோ என கவலைப்பட்டேன். இப்போது ஆறுதலாக இருக்கிறது” என கண்ணீர் கசிய சொல்கிறார்.
அந்த திருடன் அடக்கா ராஜு சொல்கிறார். “நான் இன்று இரவு குடித்து விட்டு நிம்மதியாக உறங்குவேன். அவள் என் மகள் நான் அடைந்த சித்திரவதைகள் கொஞ்ச நஞ்சமல்ல, இப்போது நாம் சந்தோசமாக இருக்கிறேன்” என்கிறார்.
இந்த கொலையில் நீதிக்காக இந்துக்களும், கத்தோலிக்கர்களும் இணைந்தே போராடியிருக்கிறார்கள். ஆனால் திருச்சபைதான் பாவத்திற்கு மேல் பாவம் செய்திருக்கிறது 28 ஆண்டுகளாக…!
– இனியொரு