மாலைதீவுக்கு ஹனிமூன் சென்று வந்த நடிகைக்கு வந்த திடீர் பயம்

பல நடிகர் நடிகைகள் தங்களுடைய பொழுதை கழிக்க பக்கத்தில் உள்ள தீவுக்கு சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் சமீபத்தில் கல்யாணமான நடிகையும் தன்னுடைய கணவருடன் அங்கு ஹனிமூன் சென்றிருந்தார்.

 

அவர் மட்டும் இல்லாமல் அக்கட தேசத்தில் முன்னணியில் இருக்கும் அனைத்து நடிகர் நடிகைகளும் குடும்பம் குடும்பமாக ஜோடி ஜோடியாக அந்த தீவை நோக்கி படையெடுத்தனர். ஓசியில் ஆஃபர் கிடைத்ததால் அனைவரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இருந்து வந்தனர்.

இந்நிலையில் அங்கு சென்ற பிரபல நடிகை ஒருவருக்கு சமீபத்தில் அந்த வைரஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாம். இதற்காக தற்போது தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் மருத்துவ ஆலோசனைப்படி நடந்து வருகிறாராம். அந்த நடிகையுடன் மிகவும் நெருக்கமான நட்பில் இருந்தவர்தான் இந்த முன்னணி நடிகை. சமீபத்தில் தன்னுடைய தொழிலதிபர் கணவருடன் தீவுக்கு தேனிலவு கொண்டாட சென்றார்.

தேனிலவும் நல்லபடியாக முடிந்தது. தற்போது அடுத்ததாக படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய அந்த நாயகிக்கு திடீரென பயம் எடுத்து விட்டதாம். மேலும் படப்பிடிப்புகளுக்கு செல்லாமல் தற்போது டிமிக்கி கொடுத்து வருகிறாராம். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தனது கணவருடன் வைரஸ் நோய் டெஸ்ட் எடுத்துள்ளார் வந்த நாயகி.

ரிசல்ட் வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்பதால் தற்போது நடுநடுங்கி கொண்டிருக்கிறாராம் அந்த நடிகை. தற்போது அந்த தீவுக்கு சென்ற மற்ற நடிகைகள் அனைவருமே கொஞ்சம் பயத்தில்தான் இருக்கிறார்களாம்.

Leave A Reply

Your email address will not be published.