வெளியானது சித்ரா மரணத்தில் பரபரப்பைக் கூட்டும் 250 பக்க அறிக்கை
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜே சித்ராவின் விபரீதமான முடிவிற்கான காரணத்தை போலீசாரும், ஆர்டிஓ-வும் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், ஆர்டிஓ விசாரணை நேற்று முடிந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விசாரணையின் முடிவில் 250 பக்க அறிக்கை ஒன்றையும் ஆர்டிஓ வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே சித்ராவின் மரணத்திற்கு முக்கியமான காரணம் அவரது கணவர் ஹேமந்த் தான் என்று கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல், அவர் கைது செய்யப்பட்டு பொன்னேரி சிறையிலும் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பல நாட்களாக சித்ராவின் தாய், தந்தை, ஹேம்நாத்-இன் அம்மா, அப்பா, தம்பி என பல தரப்பினரிடமும் ஆர்டிஓ விசாரணையில் ஈடுபட்டது. மேலும் அந்த விசாரணையின் அடிப்படையில் தற்போது 250 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது ஆர்டிஓ.
இந்த அறிக்கை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சித்ரா வரதட்சனை கொடுமையால் இறந்திருக்கக்கூடும் என்று பல்வேறு தரப்பினரும் கூறிக் கொண்டிருந்த நிலையில், தற்போது சித்ரா வரதட்சணைக் கொடுமையால் இறக்கவில்லை என்று ஆர்டிஓ விசாரணை மூலம் தெளிவுபடுத்தி உள்ளது.