உறுப்பு மாற்று மோசடி, பத்திரிகையாளர் எஸ். வி. பிரதீப்பின் மரணம் மற்றும்  கிறிஸ்தவ மதபரைப்புரையாளர் கே.பி. யோஹனான்!

பல முக்கிய ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்த 43 வயதான மலையாள பத்திரிகையாளர் எஸ்.வி.பிரதீப்,  டிசம்பர் 15 அன்று ஒரு வாகன விபத்தில்  கொல்லப்பட்டார்.

இந்த விபத்து மரணம் கேரள மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.  ஏனெனில் அவர் தனது பத்திரிக்கையாளர் பணியில் மிகவும் நேர்மையானவராகவும் துணிவானவராகவும் மற்றும் பத்திரிகை நெறிமுறைகளைப் பின்பற்றி வந்தவர். ஆளும் மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதிகளையும் தொடர்ந்து  விமர்சித்து வந்திருந்தார். பெரும்பாலும் பிரதீப் கேரளாவில் பணிபுரியும் அடிப்படைவாத சக்திகளை தனது பல்வேறு அறிக்கைகளில் அம்பலப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தற்போது கேரளாவை உலுக்கிய தங்க முறைகேடு தொடர்பான பிரத்யேக அறிக்கைகளை வெளியிட பிரதீப் திட்டமிட்டிருப்பதாக நம்பப்படுகிறது.  மேலும், கே.பி. யோஹனன் என்ற கிறிஸ்தவ பரப்புரையாளர் உறுப்பு மாற்று மோசடியில் ஈடுபட்டிருந்தார் என்று தெரிவித்திருந்தார்.

 

தனது ஒரு செய்தித்தொகுப்பில்  அரசின் மறைமுக உதவியுடன்; கே.பி. யோஹன்னான் குழு  நடத்தி வரும் மருத்துவமனைகள் ஊடாக  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அதிகமாக நடந்து வருகிறது மட்டுமல்ல  சமுதாயத்தின் கீழ்மட்டத்தைச் சேர்ந்தவர்களை மதம்  மாற்றச் செய்வதில் ஒரு மாஃபியா இருப்பதாகவும், பின்னர் அவர்கள் அத்தகைய உறுப்பு மாற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறியிருந்தார். கே.பி. யோஹனன் மற்றும் குழுவால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் சட்டவிரோத செயல்களால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை மறைக்க, சுமார் 20-25 தகனகூடங்கள் உள்ளன, அங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உடல்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன, இதற்கு எந்த தடயமும் இல்லை என்றும் செய்திகள் கொடுத்துக் கொண்டிருந்த  நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

எஸ்.வி.பிரதீப் தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் இருந்து ஒரு லாரி மோதியுள்ளது. காவல்துறையினர் ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.  கரைக்காமண்டபம் அருகே நடந்த விபத்தில் அதே திசையில் இருந்து வரும் ஒரு லாரி பைக்கை மோதியுள்ளது  மர்மம் இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து இந்த வழக்கை விசாரிக்க கோட்டை உதவி ஆணையர் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது .  இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் நிறுவிய சி.சி.டி.வி இல்லாதது விசாரணைக் குழுவுக்கு ஒரு சவாலாக இருந்தது. இருப்பினும், அவர்கள் பிராந்தியத்தில் உள்ள மற்ற சி.சி.டி.வி.களை ஆய்வு செய்தனர்.  பத்திரிகையாளர் எஸ்.வி.பிரதீப் மரணம் குறித்து பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் மக்களும் அச்சத்தை எழுப்புயுள்ளனர்.  இதை  வெறும் விபத்தாக நம்ப மக்கள் தயாராக இல்லை. அவரது மரணத்தில் மோசமான ஊழல் அரசியல் விளையாட்டு இருப்பதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர்

accident spot -விபத்து நடந்த இடம்

இதற்கிடையில், பிரதீப்பின் தாய் வசந்தகுமாரி மற்றும் குடும்பத்தினர் பிரதீபுக்கு  அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் விபத்து திட்டமிடப்பட்டு நடந்ததாகவும் சந்தேகிப்பதாக  கூறினர்.  சமூக ஊடகங்களில் உள்ளவர்களிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக பிரதீப்பின் சகோதரி ப்ரீஜா எஸ் நாயர் கூறினார்.  சில நெட்டிசன்கள் பத்திரிகையாளரின் மரணம் ஒரு திட்டமிட்ட கொலை என்று கூறி, இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

 

உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் வி முரளீதரன், பாஜக கேரள தலைவர் கே.சுரேந்திரன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கோரியுள்ளனர்.

 

பிரதீப் தனது பத்திரிகை வாழ்க்கையை கௌமுதி பத்திரிக்கையுடன் தொடங்கினார், பின்னர் ஒளிபரப்பு பத்திரிகைக்கு மாறினார். மனோரமா நியூஸ், மீடியா ஒன், ஜெய்ஹிந்த், நியூஸ் 18 மற்றும் மங்களம் டிவி போன்ற பல ஊடகங்களில் பணியாற்றியுள்ளார்.

 

சக பத்திரிகையாளர்கள்; எஸ்.வி. பிரதீப்பின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள யூனியன் ஆஃப் ஒர்க் ஜர்னலிஸ்ட் வழியாக கோரியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.