திருகோணமலையில் ஒரு வாரத்தில் 104 பேருக்குக் கொரோனாத் தொற்று

இம்மாதம் 20ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் 104 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை திருகோணமலை மாவட்ட அரச அதிபர் சமன் தர்சன பாண்டிகோரள தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் 58 பேருக்கும், மூதூரில் 28 பேருக்கும், கிண்ணியாவில் 9 பேருக்கும், தம்பலகாமத்தில் 5 பேருக்கும், சேருவிலவில் 3 பேருக்கும் மற்றும் கோமரங்கடவெலவில் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
வெளிமாவட்டங்களிலிருந்து திருகோணமலை மாவட்டத்துக்கு வருபவர்கள் சுகாதார நடைமுறைகளை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.