அடக்கம் செய்வதா? எரிப்பதா ? அறிக்கை பிரதமருக்கு : வாசுதேவா நானாயக்கார
நாட்டில் நிலத்தடி நீர் மிகவும் ஆழமாக இருக்கும் இரண்டு இடங்கள் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகால் துறை அமைச்சர் வாசுதேவா நானாயக்கார தெரிவித்தார்.
முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்கு ஏற்ப தான் அவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.
இந்த பணியை புவியியலாளர்களிடம் ஒப்படைத்த பின்னர், மன்னார் மரிச்சகட்டு மற்றும் கிழக்கு மாகாணத்தின் எரகம ஆகிய பகுதிகளில் 30 அடி வரை நிலத்தடி நீர் இல்லை என்று கண்டுபிடித்து பிரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்ததாக அமைச்சர் மேலும் விளக்கமளித்தார்.
அந்த அறிக்கை பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், மருத்துவர்கள் அதை தங்கள் குழுவில் பரிசீலிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
கொரோனா தொற்று காரணமாக இறந்த முஸ்லிம்களை அடக்கம் செய்வது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இப்படியான விளக்கத்தை .வாசுதேவா நானாயக்கார தெரிவித்தார்.