பாகிஸ்தான் அணி முதல் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி தொடர்ந்தும் முன்னிலை.
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியுசிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 431 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணி சார்பில் அணித்தலைவர் வில்லியம்சன் அதிகபட்சமாக 129 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.
பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட்டையும் யாசிர் ஷா 3 விக்கெட்டையும் அப்பாஸ், அஸ்ரப் மற்றும் நசீம் ஷா தலா ஒரு விக்கெட்டை பதம் பதார்த்தனர்.
இதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கட்டினை இழந்து 30 ஓட்டங்களை பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பாக சான் மசூட், அபிட் அலி ஆகியோர் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். மசூட் 10 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை ஜெமிசன் பந்தில் ஆட்டமிழந்தார்.
பின்னர் அப்பாஸ் ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.பாகிஸ்தான் அணி 401 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்கள் எடுத்திருந்தது
நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ம் திகதி மவுன்ட் மவுங்கானுயில் ஆரம்பமானது. நாணயச்சுழற்சியிலல் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.