ரஜினிக்கு இரத்த அழுத்தம் வரக் காரணம் கீர்த்தி சுரேஷ்?
ரஜினிக்கு கொராணா இல்லை என்று தெரிந்தபோதும் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமானது எப்படி? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் வலம் வரத் தொடங்கியுள்ளது. ஆனால் அதற்கு கீர்த்தி சுரேஷ் தான் காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
விரைவில் அரசியலில் களமிறங்க உள்ளார் ரஜினி. இதற்காக தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகளை விரைவில் முடித்துக் கொடுக்க திட்டம் போட்டு வேக வேகமாக செயல்பட்டு வந்தார்.
ஹைதராபாத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த அண்ணாத்த படப்பிடிப்பில் திடீரென சிலருக்கு கொராணா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் ரஜினி அதிர்ந்து போய் விட்டாராம்.
மேலும் ரஜினி மற்றும் கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப் பட்டு வந்துள்ளன. அதில் கீர்த்தி சுரேஷ் மேக்கப்மேன் ஒருவருக்கு ஒருவர் தொற்று ஏற்பட்டு உள்ளதாம். ரஜினிக்கு கொரானா தொற்று இல்லை என்பது உறுதியாக தெரிந்தாலும் அவரது மனது சாந்த அடையவில்லையாம்.
கீர்த்தி சுரேஷ் மூலமாக தனக்கு கொரானா வந்து விடுமோ என பயந்து கொண்டே இருந்தாராம் ரஜினி. இதனால்தான் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அப்போலோ மருத்துவமனை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ரஜினிகாந்த் டிசம்பவர் 25ம் தேதி கடுமையான ரத்த அழுத்தத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து அவரது உடல்நிலை குறித்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. அவரது ரத்த அழுத்தம் சீராக நிலையாக இருக்கிறது. அவர் நலமாக இருப்பதாக உணர்கிறார். அவருடைய உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததையடுத்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார் செய்யபட்டிருக்கிறார்.
அவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகான உடல்நிலையின் அடிப்படையில், ஏற்படும் ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் அவரது வயது காரணமாக கூடுதலாக மருந்துகளும் உணவுக் கட்டுப்பாடு முறைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளது: 1. ஒரு வாரத்துக்கு முழுவதுமாக படுக்கையில் ஓய்வு எடுக்க வேண்டும். ரத்த அழுத்தம் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். 2. சிறிய அளவில் உடல் ரீதியான செயல்பாடு இருக்க வேண்டும். மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். இந்த அறிவுத்தல்களின் பேரில் அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு எந்த செயல்பாடுகளையும் தவிர்க்க வேண்டும். இவை மீறப்பட்டால், கோவிட் 19 தொற்று ஏற்படுவதற்கு ஆபத்து அதிகரிக்கும்” என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு தனி விமானம் மூலம் சென்னை வந்துள்ளார் ரஜினிகாந்த்.