வல்லைப் பாலத்தினுள் வான் பாய்ந்ததில் இருவர் படுகாயம் : இயக்கச்சியிலும் விபத்து
வடமராட்சி – வல்லைப் பாலத்தில் இன்று கப் ரக வாகனம் பாய்ந்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
வேகமாக வந்த குறித்த வாகனம், வீதியை விட்டு விலகி பாலத்தில் பாய்ந்தது எனவும், அதில் பயணித்த இருவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் எனவும் பொலிஸார் தெரிவித்த்தனர்.
இதேவேளை, இயக்கச்சியில் இன்று கண்டெய்னர் வாகனம் ஒன்று வீதியில் சரிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. எனினும், எந்தவொரு உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை