நிதானத்தை கைவிட்டு திணறிய ஆஸ்திரேலிய அணி!புதிய யுக்தியை கையாண்ட ரிஷப் பந்த்
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களை எடுத்தது.
இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி நிதானமான ஆட்டத்தை கையாண்டது. கேப்டன் ரகானே சதமடித்தார் அவருக்கு ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த் ஆகியோர் நல்ல ஒத்துழைப்பு தந்தனர்.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் பேட்டிங் செய்த விதம் நன்றாக இருந்தது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்திற்குள் வந்தது.
ரிஷப் பண்ட் களத்திற்குள் வந்தவுடன் ஆஸ்திரேலிய அணியின் பவுலர்கள் கம்மின்ஸ், ஸ்டார்க் ஹஸல்வுட் தொடங்கி எல்லோரும் அட்டாக்கிங் பவுலிங்கை செய்து வந்தனர். எல்லா பந்திலும் விக்கெட் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பவுலிங் செய்தனர்.
அவர்கள் நெருக்கடி அளித்தாலும் ரிஷப் பந்த் பேட்டிங் செய்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. தொடக்கத்தில் இருந்து பண்ட் அதிரடியாக ஆடினார். இதனால் இந்திய அணி ஸ்கோர் வேகமாக உயர்ந்தது ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களும் விக்கெட் எடுக்கும் நோக்கத்தை கைவிட்டு விட்டு ரன்களை கட்டுப்படுத்த தொடங்கினர்.
ஆஸ்திரேலிய அணியினர் ரன் செல்லாமல் இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்தனர். தொடக்கத்தில் இருந்து பண்ட் அதிரடி காட்டியதே இதற்கு காரணமாக இருந்தது.