நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு சென்னை ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு சென்னை ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. தர்மபிரபு, கோலமாவு கோகிலா, ஆண்டவன் கட்டளை, கோமாளி உள்பட பல படங்களில் நடித்தவர் யோகிபாபு. இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவரது மனைவி பெயர் மஞ்சு பார்கவி.
இந்தநிலையில் மஞ்சு பார்கவி கர்ப்பமாக இருந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக யோகிபாபு தெரிவித்தார். மேலும் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அனைவருக்கும் அவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி அடைந்தார்.