ரஜினி அரசியல் வேண்டாம் என ஒதுங்க , இந்த இரண்டும்தான் காரணங்களா?
ரஜினிகாந்த் டிசம்பர் 31ஆம் தேதி தனது கட்சியை அறிவித்து இன்னும் 4 மாதங்களில் முதலமைச்சர் ஆகி விடுவார் என வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு பிம்பிலிக்கா பிளாப்பி காட்டி, கட்சியும் இல்லை ஒன்றும் இல்லை என ரஜினி அறிவித்தது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த டிசம்பர் மாதத்தை ரஜினி ரசிகர்கள் தங்களது வாழ்க்கையில் மறக்க மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி. கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்ற மாபெரும் சந்தோஷத்தை கொடுத்து விட்டு மாத கடைசியில் அதை அப்படியே பிடுங்கிக் கொண்டார் ரஜினிகாந்த். இது ஒருபுறமிருக்க, ஏன் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு பின்னாளில் கட்சியா, அப்படினா என்ன? என்று கேட்டதற்கு காரணம் என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் பைத்தியம் பிடித்தது போல் ஆகி விட்டனர்.
முதல் காரணமாக கருதப்படுவது, ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு தங்களுடன் நிச்சயம் கூட்டணி அமைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து அவருக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. முதலில் ரஜினிகாந்த் 234 தொகுதிகளிலும் சுயேச்சையாக நிற்பதாக அறிவித்தார் என்பது ஞாபகம் இருக்கிறதா.
ஆனால் சமீபத்தில் கட்சி நிர்வாகிகளாக மத்தியில் ஆளும் கட்சியினர்களை அறிமுகப்படுத்தியது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். இதனால் ரஜினி மத்திய கட்சியில் இணைந்து விட்டார் எனவும் சந்தேகம் கிளம்பின.
இரண்டாவது காரணமாக பார்க்கப்படுவது, அண்டை மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடி ஆகியோரை போல் திடீரென ஒரே நாளில் மாற்றம் ஏற்படுமா என்ற சந்தேகம் ரஜினிக்கு சமீப காலமாக இருந்து வந்ததாம். மேலும் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொன்னது பெரிய அளவில் ஒரு தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு காரணங்களையும் யோசித்து தான் ரஜினி அரசியல் நமக்கு சரிப்பட்டு வராது என ஒதுங்கிக் கொண்டாராம். இந்த மாதிரி பேச்சுகள் தற்போது அவரது வட்டாரங்களில் இருந்து வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் சமூகவலைதளங்களில் மூலமே ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை ரஜினி ரசிகர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதே ரஜினியின் கவலையாக இருந்ததாகவும் கூறுகின்றனர்