நான்கு வாரங்களில் 1,927 பேர் கைது! – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார்கள் என்கிறார் பொலிஸ் பேச்சாளர்.
நான்கு வாரங்களில் 1,927 பேர் கைது! – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார்கள் என்கிறார் பொலிஸ் பேச்சாளர்
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய ஆயிரத்து 927 பேர் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இன்று தெரிவித்தார்.
கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 28 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியைப் பேணாத மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் நடமாடியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.