மட்டக்களப்பில் கொரணா தொற்றோடு பலர் இன்று இனங்காணல்.

மட்டகளப்பு நகர் பகுதியில் 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிகரித்துவருகின்ற கொரோனா தொற்று காரணமாக தொற்றாளர்கள் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாரை திருகோணமலை மாவட்டங்களில் அதிகரித்துவருகின்றனர். இது தொடர்பில் சுகாதார பகுதியினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த வகையிலே இன்று மட்டக்களப்பில் நகர்ப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரிகின்ற சுமார் 553 பேருக்கான ரபிட் அன்டிஜன் பரிசோதனையின் போது 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் ரபிட் அன்டிஜன் பரிசோதனைக்கு சமூகமளிக்கவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக காத்தான்குடி கல்லாறு மட்டக்களப்பு நகர் போன்ற பகுதிகளில் ரபிட் அன்டிஜன் பரிசோதனை தொடர்ச்சியாக நடத்துவதற்கு சுகாதார பகுதியினர் தீர்மானித்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்று அறிகுறி தென்படுகின்ற பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தங்களை பரிசோதித்து கொள்வதன் மூலம் தங்கள் குடும்பத்தையும் அயலவர்களையும் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துகொள்ள முடியுமென சுகாதார பிரிவினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்காலத்தில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும் புதுவருட கொண்டாட்டங்களை தவிர்த்து செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.