பிரதி பொலிஸ் மாஅதிபர், பொதுமக்களிடம் வேண்டுகோள்
எச்சரிக்கிறார் பிரதிப் பொலிஸ் மாஅதிபர்
இன்றைய தினத்துக்கான (31) பண்டிகை நிகழ்வுகளை குடும்பத்தாருடன் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மாஅதிபர், பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய தினம் தீர்மானம் மிக்கதாகும் என கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண, குடும்பத்தினருடன் மாத்திரம் கொண்டாட்டங்களை மட்டுப்படுத்திக் கொள்ளுமாறு கோரியுள்ளார். பொதுப் போக்குவரத்து மற்றும் கொழும்பிலிருந்து வெளியேறும் பஸ்களில் நாளை மீண்டும் அதிகாரிகள் சிவில் உடையில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.