நாவல் காடு பகுதியில் இனம்காணப்பட்ட மனித உடற்பாகங்கள்.

மீட்கப்பட்ட_உடற்பாகங்கள் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் ?
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல் காடு பகுதியில் நேற்று இனம்காணப்பட்ட மனித உடல் பாகங்களை மீட்கும் பணிகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் பதில் நீதிபதி ந.சுதர்சன் முன்னிலையில் இன்று அகழ்வு மற்றும் மீட்பு பணிகள் இடம்பெற்றது.
குறித்த இடத்தில் தடயவியல் பொலிசார் மற்றும் பொலிசார் சட்ட வைத்திய அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இணைந்து குறித்த உடற்பாகங்கள் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மீட்கப்பட்ட உடல் பாகங்கள் உடன் சிவப்பு நீல நிறம் கலந்த NAUTICA வகை டீ சேட் காணப்பட்டுள்ளது, நைலோன் சரம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது அதனுடைய நிறம் தெளிவாக இல்லை, மேலும்
மண்டையோடு மற்றும் எலும்புகள் உள்ளிட்ட தடயப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது, மீட்கப்பட்ட உடற்பாகங்களில் ஒரு கையின் பாகங்கள் இல்லை.
கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகம்.
தொடர்ந்தும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.