விஜய் சேதுபதி ஹிந்தியில் ‘மும்பைகார்’ மூலம் அறிமுகமாகிறார்

நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட் திரையுலகில் ஹீரோவாக நடிக்க உள்ள படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது.
தளபதி விஜய்யை வைத்து தற்போது ’மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படம் ’மாநகரம்’. முதல் படத்திலேயே வித்தியாசமான கதையால் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார்.
பல பிரபலங்களும் இவர் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி ஆகிய படங்களை மனதார பாராட்டினர். தற்போது ’மாநகரம்’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.
இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி, ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்த படத்தின் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸேவும் மற்றொரு ஹீரோவாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளனர்.
புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகியுள்ளது. ’மும்பைகார்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், நடிப்பது மிகவும் மகிழ்ச்சி என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் தான்ய மாணிக்தலா, ஹிர்து ஹரூன், சஞ்சய் மிஸ்ரா, ரன்வீர் ஷோரே, சச்சின் கேடேகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிரசாந்த் பிள்ளை இசையமைக்க .ஷிபு தமீன்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளார்.