மேலும் மூவர் பலியெடுப்பு, கொரோனா உயிரிழப்பு 211.

மேலும் மூவர் பலியெடுப்பு;
கொரோனா உயிரிழப்பு 211.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இரு ஆண்களும், பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் 70 வயதைக் கடந்தவர்கள்.
கொழும்பு – 13 ஐச் சேர்ந்த 93 வயதுடைய பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளார். அவரது சாவுக்கான காரணம் கொரோனாத் தொற்று தீவிரமடைந்தமையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருதானை பொலிஸ் பிரிவில் அடையாளம் காணப்படாத சுமார் 70 – 80 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளார். அவரது சாவுக்கான காரணம் கொரோனாத் தொற்று தீவிரமடைந்தமையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 12 ஐச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது அந்த வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். அவரது சாவுக்கான காரணம் கொரோனாத் தொற்றுடன் கூடிய நிமோனியா நிலையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 198 பேர் கொரோனாவின் மூன்றாவது அலையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது