இலங்கையில் 44 ஆயிரத்தைக் கடந்தது கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை.

இலங்கையில் 44 ஆயிரத்தைக் கடந்தது
கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை.
நேற்று மட்டும் 502 பேர் அடையாளம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அந்தவகையில் நேற்றும் 502 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 358 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 40 ஆயிரத்து 628 பேருக்குக் கொரோனாவின் மூன்றாவது அலையின் மூலம் வைரஸ் தொற்றியுள்ளது.
இதேவேளை, மொத்தத் தொற்றாளர்களில் 36 ஆயிரத்து 717 பேர் குணமடைந்துள்ளனர். 7 ஆயிரத்து 430 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.