காலி முகத்திடலிற்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள பூங்கா திறந்து வைக்கப்பட்டது.
காலிமுகத்திடலிற்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள பூங்கா பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆலோசனையின் பேரில் காலிமுகத்திடலிற்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள பூங்கா பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலிற்கு எதிராக பிரதேசத்தில் புதிய பாலதக்ச மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த பூங்கா பொது மக்களின் பொழுதுபோக்குக்காக நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள விசேட பூங்காவாகும்.
கொழும்பு நகரத்தை தெற்காசியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் தலைநகரங்களில் ஒன்றாக மாற்றுவதும், நகர்ப்புற மக்களுக்கு சுற்றுச்சூழல் நட்பு நிலப்பரப்பை அனுபவிப்பதற்கும், பொருளாதார மதிப்பைச் சேர்ப்பதற்கும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
02 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குறித்த நகர வன பூங்கா மூன்று கட்ட திட்டமாக முன்னெடுக்கப்பட்டதுடன், குறித்த திட்டத்திற்கென 135 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.