இந்நாட்டில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கிறது? : மனோ கணேசன்.
இந்நாட்டில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கிறது? : மனோ கணேசன்.
கடந்த அரசின், தேசிய நல்லிணக்கத்துக்கு பொறுப்பான அமைச்சராக நானே இருந்தேன். இன்று உங்கள் அரசு அந்த அமைச்சையே அழித்து விட்டதே. இந்நிலையில் இன்று இந்நாட்டில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கிறது? இன்று பாராளுமன்றத்தில் மனோ கணேசன் கேள்வி எழுப்பினார்.
கனடாவின் ஒன்டாரியோ பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் ஒரு சட்ட மசோதா, இலங்கையில் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டை அழிக்கிறது என ஆளும் கட்சி பாரளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் சற்று முன் சொன்னார்.
ஒன்டாரியோ பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டம் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இங்கே நான் முதலில் சுரேன் ராகவனிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன்.
இந்நாட்டில் இன்று எங்கே ஐயா, தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது? சொல்லுங்கள், பார்ப்போம்..!
“ஒரே நாடு, ஒரே சட்டம்” என உங்கள் அரசு சொல்கிறது. ஆனால் சிறைத் தண்டனை கைதியான பெளத்த தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்கிறது. ஆனால் தமிழ் கைதிகளுக்கு அது கிடைப்பதில்லை.
இந்நாட்டில் சிங்களவருடன் சேர்ந்து வாழவே தமிழரும், முஸ்லிம்களும் விரும்புகிறோம். ஆனால், உங்கள் சட்டம் சிங்களவருக்கு ஒன்று, தமிழருக்கு ஒன்று, முஸ்லிம்களுக்கு ஒன்று என்றல்லவா இருக்கிறது?
இதுவா தேசிய நல்லிணக்கம், சுரேன் ராகவன்? சும்மா இந்த அரசில் இல்லாத ஒன்றிற்காக மாரடிக்க வேண்டாம். என்றார்.