இறால் பிடிக்க சென்றவர் முதலை கடிக்கு இலக்காகி உயிரிழப்பு.
முதலை கடிக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.
மட்டக்களப்பு வாவிக்கரை நீரோடை பகுதியில் இறால் பிடிக்க சென்றவர் முதலை கடிக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடை வாவிக்கரை வீதி கீரி ஓடையில் இறால் பிடிப்பதில் ஈடுபட்ட ஒருவரை முதலை இழுத்துச் சென்ற நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை சடலம் அந்த பகுதியிலுள்ள கீரியோடை நீரோடையில் முதலைக்கடிக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு குமாரபுரம் புன்னைச்சோலை பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய ஆரோக்கியநாதன் மரியதாஸன் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
குறித்த நபர் வழமைபோல நேற்று திங்கட்கிழமை மாலை சின்ன உப்போடை வாவிக்கரை வீதி கீரி ஓடையில் இறால் பிடிப்பதற்கு சென்று இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்களினால் அவரை தேடிய நிலையில் இன்று வாவிக்கரை வீதி கீரி ஓடை நீரோடை பகுதியில் முதலைக்கடிக்கு இலக்கண நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
குறித்த சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரம்பிள்ளை ஜீவரத்தினம் ஆகியோரின் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.