இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்கு கொரோனா வைரஸ் தொற்று.
இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ள இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் இலங்கை வந்தடைந்தனர். அப்போது விமான நிலையத்தில் வைத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் மொயீன் அலிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இலங்கை அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படி 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட இருக்கிறார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கிறிஸ் வோக்ஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்கிறார்.