மட்டு போதான வைத்தியசாலைக்கு வைத்திய இயந்திர உபகரணங்கள் வழங்கிவைப்பு.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு (Cardiology Unit Cardiac Catheterization Laboratory)  வழங்கப்படவிருந்த  இதய வடிகுழாய் மற்றும் ஆஞ்சியோகிராம் ஆகிய வைத்திய இயந்திர உபகரணங்கள் வேறு மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின்  நடவடிக்கையால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு வைத்தியசாலைகளிலும் இவ் இயந்திரங்கள் இல்லாமையினால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று காலையில் ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சதாசிவம் நிரோசன்

Leave A Reply

Your email address will not be published.