சாமாக குளத்தில் நீராடுவதும் உள்நுழைவதும் தடை.
திருக்கோவில் பிரதேச செயலக பிரிவின் சாகாம குளத்தில் கடந்த சில நாட்களாக மலைகள் வழியே நீர் வழிந்தோடும் இயற்கை காட்சியை பார்க்கவும் நீராடவும் மக்கள் கூட்டம் வந்திருந்தனர் .
நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்தது.
மேலும் இன்று ஆலையடிவேம்பு , அக்கரைப்பற்று பிரதேசங்கள் தனிமைபடுத்தப்பட்டு விடுவிக்கப்படவுள்ளதால் அங்கிருந்து மக்கள் கூட்டம் வரலாம் எனவும் கொரோனா கட்டுப்படுத்தும் நோக்கில் சாகாம குளத்திற்கு செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது
திருக்கோவில் பிரதேச கொரோனா தடுப்பு செயலணி சாகாம குளத்தை பார்வையிட்டதுடன் இன்று முதல் சாகாம குளத்தில் உள் நுழைவதும், நீராடுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர் .
இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர் .
சதாசிவம் நிரோசன்