கிளிநொச்சி ஆனைவிழுந்தான் அரசினர் தமிழ் கலவன் மாணவர்களை கெளரவிப்பு செய்யும் நிகழ்வு.
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பெருமாள் சிவகுமார் சமூக சேவைகள் அமைப்பின் ஊடாக
2020 ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தோற்றிய 18 மாணவர்களையும் உள்ளடக்கி அவர்களை கெளரவிப்பு செய்யும் நிகழ்வு 06/01/2021 அன்று பாடசாலை அதிபர் திருமதி. சி.இராஜேஸ்வரன தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கிளிநொச்சி வலயகல்வி பணிப்பாளர் கி.கமலராஜன், சிறப்பு விருந்தினர்களாக சு.தர்மரட்ணம் கரைச்சி கோட்டக் கல்விப் பணிப்பாளர் க.மதுரநாயகம் முதல்வர் அக்கராயன் மகா வித்தியாலயம். பு.சுயந்தன் கிராம அலுவலர் ஆனைவிழுந்தான் மற்றும் அக்கராயன் பாடசாலை பழைய மாணவன் பெ.சிவகுமார், மற்றும் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து மாணவர்களுக்கு பாராட்டு பரிசில்களும் தரம் 1 தொடக்கம் 5 வரையான 75 மாணவர்களுக்கு பெ.சிவகுமார் அவர்களின் சொந்த நிதியில் இருந்து சுமார் ஒரு இலட்சம் பெறுதியான கற்றல் உபகரணங்களும் புத்தகப் பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.