ஜோ-பைடின் வெற்றிப் பெற்றதாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ-பிடின் வெற்றிப் பெற்றதாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

பரபரப்பாக நடந்த முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடின் வெற்றி பெற்றார். ஆனால் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்போ தேர்தலில் மிகப்பெரிய வாக்குப்பதிவு மோசடி நடந்துள்ளது எனக் கூறி நீதிமன்றத்திற்கு சென்றார். இதற்கு பைடன், ட்ரம்ப் இப்படி நடந்து கொள்வது சங்கடமாக இருப்பதாக வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் தேர்தல் ஆணையரிடம் ட்ரம்ப் தன்னை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும் எனக் கூறியதாக சொல்லும் ஓடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தற்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ – பிடன் வெற்றிப் பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் பொலிஸ் பாதுகாப்பு மத்தியில் அதிகாரிகள் அழைத்துவரப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

ஆனால் இவரது வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவரது ஆதரவாளர்கள் நேற்று தலைநகர் வாஷிங்டனில் மாபெரும் கண்டன பேரணிகளை நடத்தினர்.

அவரது தேர்தல் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வு கூடியது. அதில், தேர்வுக் குழு வாக்காளர்கள் பதிவுசெய்த வாக்குகள் எண்ணப்பட்டது. ஜோ பிடனுக்கு 206 வாக்குகளும் டிரம்புக்கு 232 வாக்குகள் கிடைத்தது. மேலும் சில மாநிலங்களில் உறுதியாகாமல் இருந்த ஜோ பிடனின் வெற்றியை அமெரிக்க நாடாளுமன்றம் உறுதி செய்தது.

நாடாளுமன்றத்தில் ஜோ பிடனை ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றிய கையேடு, வெற்றியை அங்கீகரித்து ஜோ பிடனுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. ஜோ பிடனை ஜனாதிபதியாக அறிவிக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் ஆயிரக்கணக்கான ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள், கைகளில் கொடிகளை ஏந்தியபடி முழக்கமிட்டு கொண்டு, தடுப்புகளை கீழே தள்ளிவிட்டும் உடைத்து கொண்டும் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

வன்முறை, துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. ஒரு பெண் துப்பாக்கிச்சூட்டில் இறந்த நிலையில் 3 பேர் தள்ளுமுள்ளுவில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.