பிரித்தானியாவின் உயரிய கௌரவ விருதுகளை பெறும் இலங்கையர்கள் !
பிரித்தானியாவின் உயரிய கௌரவ விருது பெற்றுக்கொள்ளவுள்ளவர்கள் குறித்த முக்கிய அறிவித்தல் நேற்று வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவிலுள்ள மக்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் பிரித்தானிய மாகா ராணியின் புத்தாண்டு கௌரவ பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது.
பிரித்தானியாவிலுள்ள மக்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் பிரித்தானிய மாகா ராணியின் புத்தாண்டு கௌரவ பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது.
பிரித்தானியாவின் உயரிய கௌரவ விருது பெறும், இலங்கையர்கள் பெயர் பட்டியல் :-
பேராசிரியர் ரவி சில்வா, பேராசிரியர் Mohan Edirisinghe, பேராசிரியர் Ramani Moonesinghe, Gajan Wallooppillai, Dr Shikandhini Kanagasundrem மற்றும் Mohamed Hazrath Haleem Ossman ஆகியோருக்கு பிரிட்டிஷ் பேரரசின் ஆணைக்குழு (CBE) விருது வழங்கப்படுகிறது.
பேராசிரியர் ரவி சில்வா, கடந்த மூன்று தசாப்தங்களாக அறிவியல், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அவரது சிறந்த சேவைகளுக்காக CBE விருது பெறவுள்ளார்.
பேராசிரியர் Edirisinghe, சுகாதாரத்துறையில் மேம்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கான புதிய முறைகளை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளார்.
மயக்க மருந்து, Perioperative மற்றும் தீவிர சிகிச்சை ஆகியவற்றில் ஆற்றிய சேவைகளுக்காக பேராசிரியர் Ramani Moonesinghe-க்கு OBE விருது வழங்கப்படுகிறது.
Gajan Wallooppillai, சமத்துவம் மற்றும் சமூக ஒற்றமைக்காக அவர் ஆற்றிய சேவைகளுக்காக OBE விருது பெறுகிறார்.
நுண்ணுயிரியல், தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, குறிப்பாக நடவடிக்கைளின் போது ஆற்றிய சேவைகளுக்காக Dr Shikandhini Kanagasundrem-இற்கு OBE விருது வழங்கப்படுகிறது.
இங்கிலாந்தில் உள்ள இலங்கை சமூகத்திற்கு ஆற்றிய சேவைகளுக்காக Mohamed Hazrath Haleem Ossman-க்கு OBE விருது வழங்கப்படுகிறது.
– Rajani