மாற்றுத்திறனாளிகளை சுயதொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதற்கான செயலமர்வு!

மாற்றுத்திறனாளிகளை சுயதொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதற்கான செயலமர்வு!
மாற்றுத்திறனாளிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களிளை சுயதொழில் முயற்சியாளர்களாக உருவாக்கும் முகமாக மாவட்ட செயலக மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் முள்ளியவளை மேற்கு கிராம சேவகர் அலுவலகத்தில் இன்று(08) மு.ப9.00மணிக்கு செயலமர்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதனூடாக அவர்களை சுய தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கும் நோக்கில் குறித்த பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் வளவாளர்களாக மாவட்ட செயலக மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலக மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச் செயலமர்வில் குறித்த கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளான 25 சுயதொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.