கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் 136 பேர் பலி.

கனடாவில் கொரோனா தொற்றால் மேலும் 136 பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் எட்டாயிரத்து 154பேர் பாதிக்கப்பட்டதோடு 136பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்து 26ஆயிரத்து 800பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 16ஆயிரத்து 369பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 79ஆயிரத்து 204பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 847பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஐந்து இலட்சத்து 31ஆயிரத்து 227பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.