வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை அழைத்துவர 11 முதல் விசேட விமான சேவை!
11 முதல் விசேட விமான சேவை!
“கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடிக்கு மத்தியில் வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் பணியில் விசேட விமான சேவைகளை ஈடுபடுத்தப்படவுள்ளன.”
– இவ்வாறு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதற்கமைய எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் இவ்விசேட விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
விமான சேவைகளை அதிகரிக்க ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சையடுத்து இதற்கான இணக்கம் எட்டப்பட்டது எனவும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கைகளை ஆளும் கட்சியினர் கண்காணிக்கவுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியினரும் இணைந்து கண்காணிப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு தவறுகளைச் சுட்டிக்காட்டுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
அதேபோன்று, பணம் செலுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமானதல்ல எனவும், விரும்புபவர்கள் மாத்திரம் அவ்வாறு பணம் செலுத்தி தனிமைப்படுத்தலுக்குச் செல்ல முடியும் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.