விஜயின் மாஸ்டர் சாதனையை முறியடித்த கே.ஜி.எப் 2.
கேஜிஎஃப் 2′ டீசர் வெளியான 16 மணி நேரத்தில் 3 மில்லியன் லைக்குகளைக் குவித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கன்னடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ திரைப்படம் பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. அதனைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி அதிலும் வெற்றியை குவித்தது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், கேஜிஎஃப் ஹீரோ யாஷ் பிறந்தநாளையொட்டி நேற்றிரவே ஸ்வீட் சர்ப்ரைஸாக டீசரை வெளியிட்டது படக்குழு. இதனை ட்விட்டர் முழுக்க ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள் கேஜிஎஃப் ரசிகர்கள். டீசர் வெளியான 16 மணி நேரத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது. இதுவரை 3 மில்லியன் லைக்குகளை வாரி குவித்திருக்கிறார்கள் ரசிகர்கள். விஜய்யின் மாஸ்டர், சர்கார், மற்றும் மெர்சல் படங்களின் டீசர்கள் முதல்நாளில் குவித்த லைக் சாதனைகளையெல்லாம் கேஜிஎஃப் 2 முறியடித்துள்ளது.
கேஜிஎஃப் 2 டீசர் வெளியான முதல் நாளில் இதுவரை 3 மில்லியன் லைக்குகளை குவித்த முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பு மாஸ்டர் டீசர் வெளியான அன்று 1 மில்லியன் 85 லைக்கள் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது. இந்நிலையில், ’கேஜிஎஃப் 2’ புதிய 30 மில்லியன் பார்வையாளர்களையும் 3 மில்லியன் லைக்ஸ்களையும் குவித்துள்ளதால், கேஜிஎஃப் படக்குழு உற்சாகத்தில் இருக்கிறது.