வவுனியாவில் கொரோனா அச்சம்: மறு அறிவித்தல்வரை மூடப்படும் பாடசாலைகள்!
வவுனியாவில் கொரோனா அச்சம்: மறு அறிவித்தல்வரை மூடப்படும் பாடசாலைகள்!
வவுனியாவில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 62 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நகரிலிலுள்ள 5 பாடசாலைகள் மறுஅறிவித்தல் வரையும் மூடப்படுகின்றன..
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலமையில் இன்று (09) காலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கள்கிழமை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் பட்டானிச்சூர் பகுதி பொலிஸாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலமையில் இன்று (09) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது மாணவர்களின் நலகை கருத்தில் கொண்டு நகரில் அமைந்துள்ள பாடசாலைகளான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் , சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம் , இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் , இலங்கை தமிழ் கலவன் பாடசாலை , காமினி மகா வித்தியாலயம் ஆகியன மறு அறிவித்தல் வரை மூடப்படுவதுடன் மாவட்டத்திலுள்ள ஏனைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை (11) வழமைபோன்று ஆரம்பமாகும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.