டிரம்பின் சமூகவலைத்தளங்கள் காலவரையின்றி நிறுத்தம்! தனிமைப்படுத்தப்பட்ட அவலம்
டிரம்பின் மிகப்பெரிய அரசியல் பரப்புரை எக்காளமாக பயன்படுத்தப்பட்ட அவரது ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக ரத்து செய்ய ட்விட்டர் முடிவு செய்துள்ளது. அதற்கு காரணம் அவர் கேபிடல் ஹில் வன்முறையை ஊக்குவிக்க ட்விட்டரை தவறாக பயன்படுத்தினார் என்பது உலகம் முழுவதும் தெரியவந்த பின்னர் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அவர் 2017 ல் பதவியேற்ற நாள் முதல் முதல் , ஜோ பிடனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்த கடந்த வெள்ளிக்கிழமை வரை , டொனால்ட் டிரம்பின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளமாக பயன்படுத்தினார்.
நான்கு ஆண்டுகளாக @realDonaldTrump ஆல் இயக்கப்படும் ட்விட்டர் கணக்கு, தனிப்பட்ட மற்றும் உத்தியோகபூர்வ செய்திகளை பொதுமக்களுக்கு வழங்கியது. இதன் மூலம் தான் அமெரிக்கா புதிய கொள்கைகளை அறிவித்தது, அரசியல் எதிரிகளைத் தாக்கியது, இராணுவத்தை நிலைநிறுத்துவதன் மூலம் நாடுகளுக்கு விசுவாசமாக இருந்தது, அதன் தொலைக்காட்சி பிரபலத்தை அதிகரிப்பதாக பெருமை பேசியது. ஆனால் எல்லாவற்றிலும் மோசமானது, அவர் தனது 88 மில்லியன் ஆதரவாளர்களாக (followers) அவரை பின்தொடர்பவர்களுக்குத் தெரிவித்த தவறான தகவல், பொய்கள் . கடமையில் இருக்கும் சமயங்களில் கூட அவர் தனது மொபைல் தொலைபேசியை பார்ப்பது ஒரு பொதுவான நிகழ்வாக இருந்து வந்தது.
ஜோ பிடனின் தோல்விக்குப் பின்னர், டிரம்ப் தனது ட்விட்டர் கணக்கைப் பயன்படுத்தி இது ஒரு அரசியல் சதி என்று நாடு முழுவதும் செய்திகளை பரப்பினார். அவரது கருத்துக்களுக்காக ட்விட்டர் பலமுறை எச்சரிக்கை லேபிள்களை வெளியிட்டுள்ளது. ஆனால் அவரது நாடகம் தொடர்ந்தது.
கடந்த புதன்கிழமை, ஜனாதிபதி டிரம்பிற்கு விசுவாசமான ஒரு குழு, தேர்தல் கல்லூரி தேர்தல்களை நாசமாக்குவதற்கும், தேர்தல் முடிவுகளை அழிப்பதற்கும் ஒரு முயற்சியாக, கேபிடல் ஹில்லை தாக்கினார்கள்.
இந்த சம்பவத்தில் 4 பேருக்கு அதிகமானோர் இறந்த பிறகு ட்ரம்பின் கணக்கை ட்விட்டர் 12 மணி நேரம் நிறுத்தி வைத்தது. சமூக வலைப்பின்னலின் விதிகளை மீறும் அனைத்து ட்வீட்களும் நீக்கப்பட வேண்டும் என்றும் ட்விட்டர் கோரியது. ஆனால் டிரம்ப் தான் செய்து வந்த பதிவுகளை நிறுத்தவில்லை. இதன் விளைவாக, டிரம்பின் ட்விட்டர் கணக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் முற்றிலும் செயலற்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்டது.
ட்விட்டரில் இருந்து அவர் வெளியேற்றப்படுவது அவரது ஆதரவாளர்கள் கூட கடந்த சில நாட்களில் அவர் என்ன செய்வார் என்று யோசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் வந்ததால் அவரது செயல்பாடுகளை அறிய முடியாது திண்டாடி வருகிறார்கள். அவரது ட்விட்டர் கணக்கை செயலிழக்கச் செய்வது என்பது அவரது பதவிக்காலத்தின் இருண்ட முடிவை முன்னறிவித்தது போன்றதாகும்.
பேஸ்புக் கணக்கும் காலவரையின்றி நிறுத்தம்
டிரம்பின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கு காலவரையின்றி நிறுத்தப்படும் என்று ஜனவரி 7, 2021 அன்று பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்தார். இன்ஸ்டாகிராம் சமூக வலைப்பின்னலும் இதே முடிவையே எடுத்தது. அதுவும் பேஸ்புக் உரிமையாளருக்கு சொந்தமானதாகும்.
கேபிடல் ஹில் கலவரக்காரர்களைப் புகழ்ந்து இரண்டு பதிவுகளை ட்ரம்ப் இட்ட பின்னர் டிரம்பின் பேஸ்புக் கணக்கு ஆரம்பத்தில் 24 மணி நேரம் இடைநிறுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையின் போது, ட்ரம்பின் குடியரசுக் கட்சி நிர்வாகத்தால் மிக முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, செனட்டில் ஜனநாயகக் கட்சியினர் ஆட்சிக்கு வந்தபின்னர், பிடனின் தேர்தல் கல்லூரி பெரும்பான்மையை காங்கிரஸ் உறுதிப்படுத்திய பின்னர், டிரம்ப்பின் துணைத் தலைவரான டான் ஸ்கேவினோ (Dan Scavino) கருத்து தெரிவித்த சமயம், “ஒரு சாதாரண மாற்றத்திற்கு இடமளிக்க உறுதிபூண்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.
டிரம்ப் தனிமைப்படுத்தப்படுகிறார்
ஆன்லைன் புகைப்பட பகிர்வு இடமான ஸ்னாப்சாட் ‘Snapchat‘ கூட டிரம்பை தடை செய்துள்ளது, மேலும் டிரம்பிற்கு சொந்தமான வணிகங்களை ஷாப்பிஃபி (Shopify) யையும் அகற்றியுள்ளது. இதற்கிடையில், கேமிங் தளமான ட்விட்சும் (Twitch) டிரம்பின் கணக்கைத் முடக்கவிட்டது.
வர்ஜீனியாவைச் சேர்ந்த ஜனநாயக செனட்டரும் சமூக ஊடகங்களின் குரல் விமர்சகருமான மார்க் வார்னர் (Mark Warner) இதையெல்லாம் கார்டியனுடன் சுருக்கமாக தெரிவிக்கும் போது
“இந்த தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மிகவும் தாமதமாக நடந்துள்ளது, இது போதாது. பல ஆண்டுகளாக, இந்த தளங்கள் வன்முறை-தீவிர வலதுசாரி குழுக்கள் மற்றும் போராளிகளின் இயக்கங்களுக்கான உள்கட்டமைப்பின் மையமாக செயல்பட்டன. அவர்களின் வன்முறை, தீவிரவாத உள்ளடக்கத்திலிருந்து பல சந்தர்ப்பங்களில் (குறிப்பாக யூடியூப் வழியாக) லாபங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்ய, ஒழுங்கமைக்க, ஒருங்கிணைக்க என அவர்களுக்கு உதவியது.
இப்போது பலர் இதை நீண்ட காலத்திற்கு முன்பு செய்ய வேண்டிய ஒன்று என்று கருதுகின்றனர்.” என்றார்.
– அமாலியின் ஆக்கம் : தமிழில் ஜீவன்