ஒரு பயிற்சியாளராக இதை மிகவும் வெறுக்கிறேன். ஜஸ்டின் லாங்கர்.
ஒரு பயிற்சியாளராக இதை மிகவும் வெறுக்கிறேன். ஆஸ்திரேலியா மண்ணில் இப்படி நடப்பதை பார்க்க மிகவும் கவலையாக இருக்கிறது என ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் பவுண்டரி லைன் அருகில் பீல்டிங் செய்தபோது ஆஸ்திரேலியா ரசிகர்கள் இனவெறி வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். இதுகுறித்து பிசிசிஐ புகார் அளித்துள்ளது.
இன்றைய போட்டியின்போது அதேபோன்று வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். இதனால் மைதானத்தில் இருந்த நடுவர்களிடம் புகார் அளித்தனர். உடனடியாக கேலரில் இருந்து சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘ஒரு வீரராக இந்த சம்பவத்தை நான் வெறுக்கிறேன். ஒரு பயிற்சியாளராகவும் வெறுக்கிறேன். உலகின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்களை நாம் பார்த்திக்கிறோம். ஆஸ்திரேலியாவில் இதுபோன்று நடப்பது உண்மையிலேயே கவலை அளிப்பதாக இருக்கிறது’’ என்றார்.