சேருவாவிலவைத் தவிர, இலங்கையில் மேலும் நான்கு இடங்களில் தங்கம் : பேராசிரியர் அத்துல சேனாரத்ன
சேருவாவில பகுதிக்கு மேலதிகமாக, இலங்கை நாட்டின் மேலும் நான்கு பகுதிகளில் தங்கம் இருப்பதாக ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது என்கிறார் பெரடேனியா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அத்துலா சேனாரத்ன.
இந்த தங்கம் கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. பேராதெனிய பல்கலைக்கழகம், மாணிக்கம் மற்றும் தங்கம் குறித்த மையம் ஆகியவையோடு கனடா மற்றும் அயர்லாந்து போன்ற ஆராய்ச்சி மையங்களினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் காரணமாக இலங்கை பிரதேசத்தில் தங்கம் இருப்பது தெரிய வந்துள்ளது.
சேருவாவில பகுதியில் உள்ள இரும்பு தாது படிவுகளில் இருந்து சுமார் மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் தொலைவில் தங்கம் கிடைத்தன என அவர் மேலும் தெரிவித்தார்.
பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 600 அடி ஆழத்தில் அகழ்வாராய்ச்சி செய்த பின்னர் சேருவாவில பகுதியில் தங்கம் இருப்பதை முதன்முதலில் பேராதெனியா பல்கலைக்கழகம் கண்டுபிடித்தது என அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஒரு டன் கல் தோண்டப்படும் போது சுமார் ஐந்து கிராம் வரை தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அகழ்வாராய்ச்சிகளை விரிவாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. கிழக்கு பிரதேசத்தை விட , வேறு சில பகுதிகளில் 4 சதுர கிலோ மீட்டர் வரை தங்கம் பரந்து காணப்படுவதாகவும் , அரசு அல்லது ஒரு நிறுவனத்தின் ஆதரவு கிடைத்தால் மேலும் அகழ்வாராய்ச்சிகளை விரிவாக மேற்கொள்ள முடியும் என்றார் அவர்.
(அருண)