25 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக கற்றாளை கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுனரின் ஆலோசனைக்கு அமைய வருமானம் குறைந்த மற்றும் சமூர்த்தி பெறும் குடும்பங்களுக்கு வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், வருமானத்தை அதிகரிக்க திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 25 பயணாளிகள் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக கற்றாளை பயிர் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலக
பிரதேசசெயலாளர் T.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளை திரு K.சதிசேகரன்
திருக்கோவில் சமுர்த்திதலைமையக முகாமைதாளர் திரு. T.பரமானந்தம், திருக்கோவில் பிரதேச செயலக உதவித்திட்டமிடல்பணிப்பாளர் செல்வி M.அனோஜா திருக்கோவில் பிரதேச செயலககருத்திட்ட முகாமையாளர் P.கமலேஸ்வரன்
மற்றும் கிழக்கு மாகாண ஆளுனரின் காரியாலயத்தின் கருத்திட்ட பணிப்பாளர்
ஆஸாத் .எம்.அலியார் மற்றும் களஉத்தியோத்தர் பயணாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சதாசிவம் நிரோசன்


