பிசிஆர், அன்டிஜென் கொரோனா வைரஸ் நோய் சோதனை அடிப்படைகள்.

PCR and Antigen கொரோனா வைரஸ் நோய் 2019 சோதனை அடிப்படைகள்.
கொரோனா வைரஸ் நோய் (COVID-19) சோதனை பற்றி சமீபத்தில் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். உங்களிடம் COVID-19 இருப்பதாகவும், ஒரு சோதனை தேவை என்றும் நீங்கள் நினைத்தால், உடனடியாக உங்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநரை (பொது சுகாதார பரிசோதகர் PHI) அல்லது பொலீசாரை தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கொண்டிருந்தால், மற்றவர்களிடமிருந்து உங்களைத் தனிமைப்படுத்த வேண்டும்.
தற்போது இரண்டு வகையான கண்டறியும் சோதனைகள் உள்ளன – வைரஸின் மரபணு பொருளைக் (genetic material) கண்டறியும் RT-PCR tests சோதனைகள் போன்ற மூலக்கூறு சோதனைகள் மற்றும் வைரஸிலிருந்து குறிப்பிட்ட புரதங்களைக் (proteins) கண்டறியும் (ஆன்டிஜென்) antigen tests சோதனைகள்.
மாதிரி எங்கே பெறப்படும்
PCR:
பெரும்பாலான மாதிரிகள் (மூக்கின் பின்னால் உள்ள தொண்டையின் பகுதி) நாசி அல்லது தொண்டையில் மாதிரி எடுக்கப்படும்.
ஒரு சில சோதனைகளுக்காக உமிழ்நீர் எடுக்கப்படும்.
Antigen
பரிசோதனைக்காக மாதிரி நாசி பகுதியில் இருந்து எடுக்கப்படும்.
முடிவுகளைப் பெற எவ்வளவு நேரம் ஆகும் …
PCR
அதே நாள்
பலரிற்கு ஒரே தடவையில் எடுத்தால் ஒரு வாரம் வரை ஆகலாம்.
Antigen
மிக வேகமாக இருக்கலாம் (15 – 30 நிமிடங்கள்)
திரும்பவும் சோதனை தேவையா …
PCR
இந்த சோதனை பொதுவாக மிகவும் துல்லியமானது மற்றும் பொதுவாக மீண்டும் செய்ய தேவையில்லை
Antigen
நேர்மறையான (positive) முடிவுகள் பொதுவாக மிகவும் துல்லியமானவை, ஆனால் தவறான நேர்மறைகள் false positive ஏற்படலாம், குறிப்பாக மிகக் குறைந்த நபர்களுக்கு வைரஸ் உள்ள பகுதிகளில். எதிர்மறை ( Negative) முடிவுகளை PCR சோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டியிருக்கலாம்
இறுதியாக இவ்விரு பரிசோதனைகளும் செயலில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கண்டறிகிறது
ஆனாலும் இச்சோதனையின் முடிவுகள் Negative ஆக இருந்தாலும் அந்த சான்றிதழ் மூன்று நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
அவருக்கு மறுபடியும் கொரோன அறிகுறி இருந்தால் மீண்டும் சோதனை செய்தல் வேண்டும்.
தேக ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு சில வேளைகளில் கொரோன தொற்று ஏற்பட்டு அவரை அறியாமலே சிறு காய்ச்சல் அல்லது தடிமனுடன் அவர் குணமடைந்து இருக்கலாம் ஆனால் அவர் வயது முதிர்ந்த பலவீனமானவர்களுக்கு நோயை பரப்பி ஒரு நோய் காவியாக செயற்பட்டு அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி இருக்கலாம்.
எனவே இங்கு சுய பாதுகாப்பு முக்கியம் எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் குடும்பத்தினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவரிடமும் இருக்கு
சுகாதார முறைப்படி நடந்தால் எந்த பிரச்சினையும் இல்லை